நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்த தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தார். அவரை திருச்சி மாவட்ட திமுக முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. சேகரின் சகோதரர் கரிகாலன் தவெகவின் திருச்சி மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். அவரும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்ததாக கூறப்படுகிறது. குடமுருட்டி சேகர் சமீபகாலமாக திமுக அமைச்சரகள் நேரு, மகேஷ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் குடமுருட்டி சேகர் வேளாங்கண்ணியில் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து இருப்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தனியாக பேசிய குடமுருட்டி சேகரும் புஸ்ஸி ஆனந்தும் தற்செயலாக வேளாங்கண்ணி கோவிலில் சந்தித்ததுபோல் போடடோ எடுத்துக்கொண்டனர் என தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
