இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துவரும் திரைப்படம்தான் புஷ்பா 2. இந்த படம் வரும் சுதந்திர தினத்தன்று வெளியாகவிருக்கிறது. புஷ்பா 2 படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியிருப்பது புஷ்பா 2 குறித்த ஹைப்பை அதிகமாக்குகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த 2021ல் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. ஆக்ஷன் டிராமா படமாக உருவாகியிருந்த இந்த தெலுங்கு படத்திற்கு தெலுங்கு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது தமிழ், கன்னட, மலையாள மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார்.
புஷ்பா திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனாக கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்து வசூல், விமர்சனம் என அனைத்து விதத்திலும் ஹிட்டு கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுனும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தேவி ஸ்ரீ பிரசாத்தும் புஷ்பா படத்திற்காக பெற்று இந்த படத்தின் மதிப்பை கூட்டினார்கள்.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் அறிவிப்பின்போதே, இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியானது. கன்னட படமான கேஜிஎப் படத்தின் சாயலில் புஷ்பா 2 படத்தின் கதை இருக்கும் என கூறப்பட்டதால் கதையில் சில திருத்தத்தையும் மாற்றங்களையும் செய்தார் இயக்குனர் சுகுமார். அதன்படி திருத்தப்பட்ட கதையின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 500 கோடி எனவும் கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த படம் குறித்த சில சுவாரசியமான தகவலை படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருக்கிறார். புஷ்பா 2 படத்தின் கதையை இயக்குனர் சுகுமார் முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சந்திரபோஸிடம்தான் கூறினாராம். படத்தின் கதையை கேட்க கேட்க ஒவ்வொரு கட்சியும் இன்டர்வல் பிளாக் போல சஸ்பென்ஸுடனும் திரில்லிங்காகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருக்கிறார். மேலும் ஒரு படத்திற்கு சுவாரசியம் என்பது மிகவும் முக்கிய அம்சம் எனவும் அந்த அம்சம் படம் முழுவதும் இருப்பதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருக்கிறார். புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகம் சிறப்பாகவும் பிரமாதமாகவும் இருக்கும் எனவும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருக்கிறார். புஷ்பா 2 குறித்த தேவி ஸ்ரீ பிரசாத் பேசிய இந்த விஷயங்கள் படத்தின் ஹைப்பை கூட்டுகிறது. படம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை ஆகஸ்ட் 15 பார்த்த தெரிந்து கொள்ளலாம்.