ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் கேரளா பெரியார் புலிகள் காப்பகம் நெல்லியாம்பதி வனப்பகுதியில் இருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொள்ளாச்சி வனச்சர பகுதி ஆழியார் வால்பாறை சாலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு மற்றும் நவமலை பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுள்ளி கொம்பன் நடமாட்டம் இருந்து வருகிறது கடந்த சில தின மாதங்களுக்கு முன்பு வந்த ஒற்றைக் காட்டு யானை நவமலை சாலை மற்றும் மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் நடமாட்டம் இருந்து வருகிறது தற்போது மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு கடிதாங்காமல் ஒற்றை காட்டு யானை நவமலை சாலை மற்றும் வால்பாறை சாலை பகுதிகளில் இரவில் நடமாட்டம் அதிகம் உள்ளது கடந்த மூன்று தினங்களாக
மலைவாழ் மக்கள் குடியிருப்பு சின்னார் பதி பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது,இன்று காலை வந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள கூந்தல் பனை மரத்தை சாய்த்து மலைவாழ் மக்களை அச்சுறுத்துகிறது அப்பொழுது மலைவாழ் மக்கள் கூச்சல்ட்டும் யானையை ஆழியார் அணை பகுதிக்கு விரட்டினர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை கண்காணித்து வனப்பகுதி விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் மேலும் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் நிற்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.