Skip to content
Home » புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

  • by Senthil

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று  புருனே சென்றார்.  அங்கு  புருனே  சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தூதுக்குழுவினருடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், “சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் பேச்சுக்கள் பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இந்த பேச்சுவார்த்தை உள்ளடக்கியதாக இருந்தது. வர்த்தக உறவுகள், வர்த்தக தொடர்புகள், மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்.

எனது புருனே வருகை பயனுள்ளதாக இருந்தது. இன்னும் வலுவான இந்தியா-புருனே உறவுகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. நமது நட்பு, ஒரு சிறந்த உலகிற்கு பங்களிக்கும். புருனேயின் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் விருந்தோம்பல் மற்றும் அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தனது புருனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, சிங்கப்பூர் புறப்பட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!