Skip to content
Home » இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

  • by Authour

நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், தரமுள்ள  சுத்தமான காற்று இருக்கும் நகரமாக தமிழ்நாட்டின் நெல்லை (திருநெல்வேலி) விளங்குகிறது. காற்று தரக் குறியீட்டில் நாட்டிலேயே பாதுகாப்பான நகரமாக நெல்லை விளங்குவதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது. நெல்லையின் AQI(Air Quality Index) அளவு 33 ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் நெல்லை நகரத்தின் காற்றின் தரம் அதன் இயற்கை நிலப்பரப்பு காரணமாக நன்றாக உள்ளது.

சிறப்பான காற்றின் தரக் குறியீட்டிற்கான பட்டியலில் 5வது இடத்தில் தஞ்சாவூர் உள்ளது.  டாப் 10 இடங்களில், 7 இடங்கள்  தென் மாநிலங்களில்  உள்ளன.  இந்தியாவின் தலைநகர் டில்லி,  நாட்டிலேயே  அதிக மாசடைந்த  காற்று உள்ள நகரமாக   கணிக்கப்பட்டு்ளது.