பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல். இவர் 2015 ம் ஆண்டு குரு கிரந்த் சாஹிப் தொடர்பான படுகொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டாராம். இதற்கு தண்டயைாக சீக்கிய மத அமைப்பான அகல் தக்த், பாதல் பொற்கோவிலில் காவலர் வேலை பார்க்க வேண்டும் என கூறியதை அடுத்து பாதல் பொற்கோவில் வாயிலில் காவலாக பணியாற்றினார்.
இந்த நிலையில் இன்று பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) முன்னாள் பயங்கரவாதி புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கி சூடு நடத்தியவர் நரேன் சிங் சௌரா என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த இடத்தில் இருந்த மக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.