Skip to content

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது – பஞ்சாப் முதல்வர் பேச்சு…

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிக்கும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றுள்ளனர். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றுள்ளனர்.

29 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் பேசியதாவது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனை. தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிக்கும் என கூறினார்.

error: Content is protected !!