அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில். இன்று வீட்டில் வளர்க்கும் மாடுகளை வணங்கி நன்றி செலுத்தும் வகையில் புனித அந்தோணியார் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கிராம
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளுக்கு வண்ண கலர் பூசி ,மாலை அணிவித்து மாடுகளை புனித மிக்கேல் ஆண்டவர் தேவாலயத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு வந்த மாடுகளுக்கு பங்கு தந்தை அடைக்கலசாமி மந்திரித்து புனித நீர் தெளித்து வழிபாடு செய்தனர். இதில் ஒரு கறவை மாடு தலையில் பூ வைத்து காதில் வாக் மேன் போட்டு புடவை கட்டி கண் கண்ணாடி போட்டு வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் ,100 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கும் புனித நீர் தெளிக்கப் பட்டது.