புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அகில பாரத இந்து மகா சபா டாக்டர் வி எஸ் ஆர் ஆனந்த் அவர்கள் தேசியத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநிலத்
தலைவர் டாக்டர் வி அருணாச்சலம் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் கங்காதரன் மற்றும் மாநில மகளிர் அணியினர் தீபலட்சுமி காமாட்சி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஜெயசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.