திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று 29 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக மின்கல வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி, ஆலம்பாக்கம், கருடமங்கலம், கல்லகம், கே.கே.நல்லூர், கண்ணாகுடி, கீழரசூர், கோவண்டாக்குறிச்சி, குமுளுர், மால்வாய் முதுவத்தூர், நம்புக்குறிச்சி,
நஞ்சை சங்கேந்தி, ஊட்;டத்தூர், ஒரத்தூர், பி.கே.அகரம், பெருவளப்பூர், பதூர்பாளையம், புஞ்சை சங்கேந்தி,ரெட்டிமாங்குடி, சரடமங்கலம், சிறுகளப்பூர், திண்ணக்குளம், திரணிபாளையம்,
தாப்பாய், வந்தலைக்கூடலூர், வரகுப்பை, இ.வெள்ளனூர், விரகாலூர் ஆகிய 29 கிராம ஊராட்சிகளுக்கு தலாரூ.2,49,700- வீதம் மொத்தம் ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டிலான மின்கல வாகனங்களை வழங்கி பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தேவநாதன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் த.சிவசுப்ரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி,
ஒன்றிய பெருந்தலைவர் ரஷியாகோல்டன் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.