Skip to content

புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இரத்னசாமி தலைமை தாங்கினார். அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கொள்ளிடம் ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் புள்ளம்பாடி வாய்க்காலில் கண்டிராதீர்தம் ஏரியில் இருந்து சுக்கிரன் ஏரிவரை, வரத்து வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும். கொள்ளிடக்கறையை பலப்படுத்தி போக்குவரத்திற்கு ஏதுவாக பலப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்க விற்பனை நிலயங்களில் விதை உரம் ஆகியவற்றை போதிய அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். இயற்கை உரங்களை கூட்டுறவு விற்பனை மையங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வெள்ளப்பெருக்கு பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துடன், கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர் தங்கு தடை இன்றி அனைத்து ஏரிகளுக்கும் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேளாண் துறை அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். மேலும் ஆற்றின் கரையோரங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கும், கொள்ளிடம் திட்டில் ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டி செல்வதற்கும் தடை விதிக்க வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிக்க செல்வதற்கு அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!