திருச்சி மாநகர் தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அரியலூரில் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் 5 பேர் திருச்சி நோக்கி வந்த போது, திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி பெட்ரோல் பங்க் அருகில் எதிரே வந்த டிராக்டரில் மோதி விபத்தானது. இதில் காரில் பயணம் செய்த ஆண்டாள், கிருஷ்ணமூர்த்தி இருவரும்
சம்பவ இடத்தில் பலியாகினர். காமாட்சி ஜெயம் பாண்டியன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.