அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தில், புனித இஞ்ஞாசியார் ஆலய 81 வது பங்கு திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 20 ந்தேதி மாலை 5 மணியளவில் பங்கு தந்தை செல்வராஜ் தலைமையில், கிராம காரியஸ்தரகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தில் பங்கு தந்தை செல்வராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. விழாவில், கடந்த 26 ந்தேதி மாலை திருப்பலியும், இரவு 10 மணியளவில் மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, தேரில் புனித இஞ்ஞாசியார் எழுந்தருள வேண்டுதல் தேர்பவனி நடைபெற்றது. விழாவில், நேற்று(28 ந்தேதி) மாலை 6 மணியளவில் திருப்பலி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல், மலர் மற்றும் மின்னொளி அலங்கார தேரில் புனித இஞ்ஞாசியார் எழுந்தருள அலங்கார ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாண வேடிக்கை, கிளாரினெட் இன்னிசை முழங்க தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தமு. பக்தர்கள் வீடுகள் தோறும் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் புனித இஞ்ஞாசியார் அருளை பெற்றனர். விழாவில் இன்று(18 ந்தேதி) காலை 8.30 மணியளவில். குடந்தை மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் விழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, வனத்து சின்னப்பா் ஆலய கல்வெட்டை குடந்தை மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் திறந்து வைத்து புனிதப்படுத்தினார். நடைபெற்ற புனித இஞ்ஞாசியார் ஆலய ஆடம்பர தேர்பவனி, வனத்து சின்னப்பர் கல்வெட்டு திறப்பு விழா மற்றும் விழா திருப்பலியில் செம்பியக்குடி, குலமாணிக்கம், புதுக்கோட்டை, பாக்கியநாதபுரம், விளாகம் உள்ளிட்ட பல்வேறு கிராம கிறிஸ்தவ பக்தரகள் திரளாக கலந்துகொண்டனர்.