கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை முருகன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலிமலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் இப்பகுதி புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பிரசித்தி பெற்ற புகழிமலை கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,
புகழிமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மார்ச் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி. காவிரி ஆற்றில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புனித திருத்தத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். நிகழ்ச்சியில் யானை மீது சிவாச்சாரியார் கலசித்தினை எடுத்து வந்தார். ஊர்வலத்தின் போது தமிழர்களின் பாரம்பரியத்தை பரிசாற்றும் விதமாக காளை மாடு, குதிரை, ஒட்டகம் உள்ளிட்டவற்றை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.