புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி புதுச்சேரி அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். இளம் விதவைகளுக்கான உதவித்தொகை, மாதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலின்போது முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவித்தார். இப்போது பெண்களுக்கு மேலும் ஒரு சலுகையாக அரசு பஸ்களில் இலவச பயணத்தை அறிவித்துள்ளார்.