Skip to content

பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகனின் மகன் பேக்கரி கடை நடத்தி வரும் சக்திவேலுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்த நிலையில் பேக்கரி கடையின் மேல் பகுதியில் புதிதாக கடையின் பேர் பொறிக்கப்பட்ட புதிதாக பிளக்ஸ் போர்டு வைக்கும் பணியில் சக்திவேல் ஈடுபட்டுள்ளார் அப்போது பிளக்ஸ் போர்டில் இருந்த இரும்பு கம்பி கடையின் மேலே சென்ற மின் கம்பியின் மீது பட்டது இதனால் பிளக்ஸ் போர்டை பிடித்துக் கொண்டிருந்த சக்திவேலின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

அடைந்து கீழே விழுந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!