திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த உமாதேவி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி (42). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. இவர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது துரைசாமியை ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்கவுன்டர் செய்தார். இந்த என்கவுன்டரை நீதித்துறை நடுவர் தான் விசாரிக்க வேண்டும். ஆனால், புதுக்கோட்டை ஆர்டிஓ விசாரிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதித்து, நீதித் துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார். இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும், அதுவரை கோட்டாட்சியர் விசாரணைக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி ரவுடி துரை என்கவுன்டர்.. உயர்நீதிமன்றம் தடை உத்தரவு..
- by Authour
