Skip to content
Home » புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு முறை சுருக்கத்திருத்தம் 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்மு.அருணா ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,79123
ஆண்வாக்காளர்கள், 6,99,323,பெண்வாக்காளர்கள் மற்றும் 68மூன்றாம் பாலினத்தவர்சேர்த்து மொத்தம் 13,78,514வாக்காளர்கள் 2025-ம்ஆண்டிற்கான
இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் , வருவாய் கோட்டாட்சியர் கள் பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை) , ச.சிவக்குமார் (அறந்தாங்கி) ,அ.அக்பர்அலி (இலுப்பூர்) , தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனைக்கருப்பையா, அ.ரெத்தினம்,ஆ.செ.கணேஷ் (திமுக), இப்ராஹிம் பாபு , ராஜா முகமது (காங்கிரஸ்) , பாஸ்கர் ,எஸ்.ஏ.சேட் (அ.திமுக), உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.