புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருவள்ளுவர் இளைஞர் மன்ற 30வது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திருவள்ளுவர் தின விழா உழவர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் திருக்குறள் ஒப்பி வித்தல் போட்டி பொதுமக்கள்இளைஞர்களுக்கான ஓட்ட போட்டி போட்டி பானை உடைதல் போட்டி சைக்கிள் மெதுவாக ஓட்டும் போட்டி கயிறு இழுத்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இவ்விழாவில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.கே.தங்கமணி, தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அரு.வடிவேல் ,ஆலங்குடி நகர செயலாளர் பழனி குமார், திருவரங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி ஆறுமுகம், ஒன்றிய குழு குழு உறுப்பினர் சிதம்பரம் ,மாவட்ட திமுக பிரதிநிதி முருகன் , திருவள்ளுவர் மன்ற அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்
