புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் இன்று பேரவை தொடக்க விழா நடந்தது. விழாவை சுற்றுச்சுசூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பேரவையை தொடங்கி வைத்தார். பின்னர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் அனைவரும் மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளையும் அமைச்சர் வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கல்லூரி முதல்வர் சுகந்தி, கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு, தாசில்தார் கவியரசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.