முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணா
சிலையை அடைந்தன்ர்.
அங்கு பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு. வீரமணி , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத்தலி,திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப் பித்தன் மற்றும் திமுக நிர்வாகிகள் மு.க.ராமகிருஷ்ணன்,வை.கோ.ராஜன், கீரனூர் அஷ்ரப்அலி, ராஜேந்திரன் , புதுக்கோட்டை பெ.ராஜேஸ்வரி,மதியழகன், அ.மா.சிற்றரசு,சுப.சரவணன்,ராம்.செல்வராஜ்,அ.ரெத்தினம்,புல் வயல் சுந்தர்ராஜன், ரெங்கராஜன் ,சத்தியா,சாத்தையா, கனகம்மன்பாபு,
உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.