புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
ஆகியோர் இன்று (19.06.2023) அடிக்கல் நாட்டினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர்.ஏ.சண்முககனி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், செயற் பொறியாளர் (பொ.ப.து.) வெ.சுகுமாரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.