புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம் புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், புதுக்கோட்டை வன சரக அலுவலர் சதாசிவம், திருவப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூய்மைப் பணி முகாமில் புதுகை மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி
களின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் சிவராஜா, ஸ்ரீ மலையப்பன், கருப்பையா, நெடுஞ்சாலைத் துறை அலுவலர் செந்தில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த தூய்மைப் பணியில் 75 தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொப்பி, மஞ்சப்பை மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. தூய்மைப்பணி முகாமில் நெகிழியின் ஆபத்து குறித்தும் மஞ்சப்பையின் மகத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேசிய பசுமை படை மாணவர்களால் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. ஏற்பாடுகளை அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொ.கார்த்திக்கண்ணன் செய்திருந்தார்.