புதுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மதுரை ரோட்டில் உள்ள நமணசமுத்திரம் என்ற இடத்தில் ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கார் வெகுநேரம் நின்றிருந்ததால் காரை திறந்து பார்த்தபோது காருக்குள் 5 பேர் சடலமாக கிடந்தனர். அவர்களில் 2 பேர் பெண்கள். 3 பேர் ஆண்கள். அவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. காரின் பதிவெண்(TN 77- M1705) சேலம் ஆத்தூரை சேர்ந்தது. நமணசமுததிரம் போலீசார் சடலங்களை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அவா்கள் எப்படி இறந்தாார்கள் என்பது மர்மமாக உள்ளது.