புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் தற்பொழுது அந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட கீழ ராஜவீதி அருகே சாந்தநாதசுவாமி தெருவில் உள்ள சாந்தாரம்மன் கோயில் முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை அமைக்கும் போது கோயில் அருகே ஒரு கார் மற்றும் டூவீலர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சாலை அமைப்பவர்கள் வாகனங்கள் நின்ற இடத்தை விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் ரோடு போட்டுவிட்டு சென்றனர்… இந்த சம்பவம் புதுக்கோட்டை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்து்ளது..
Tags:புதுக்கோட்டை