காவேரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.10லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு விழா.
புதுக்கோட்டை மாவட்டம், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம். ஆர். பி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில். கட்டப்பட்ட நுழைவு வாயில் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும், அமெரிக்க வாழ் இந்தியரும், விஞ்ஞானியும், அமெரிக்க மேரிலேண்ட் மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான முனைவர் எம்.ஆர்.ராஜன் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி
நுழைவு வாயிலை திறந்து வைத்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப்படையின் சார்பில் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை
வகித்தார். அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி முனைவர் எம்.ஆர்.ராஜன்நடராஜன் சிறப்புரைஆற்றினார். பின்னர்
எம். ஆர்.பி.அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்த நேத்ரா என்ற மாணவிக்கு ரூ 20 ஆயிரமும்,இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு ரூ 15 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு ரூ 10 ஆயிரம் ரொக்கப்பரிசும், இதேபோல எம்.ஆர்.பி அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த தேன்மொழி என்ற மாணவிக்கு ரூ 25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு ரூ 20 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு ரூ 15 ஆயிரம் ஆகிய ரொக்க பரிசுகளை முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் விஞ்ஞானி ஆகியோர் வழங்கினார்கள்.