புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் x-ray விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்
அலுவலர் அ.கோ.ராஜராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது) முருகேசன் , துணை இயக்குநர் (காசநோய்)
மரு.மு.சங்கரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு ராம் கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோய் இல்லா தமிழகத்திற்கான உறுதிமொழி யினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் , துணை இயக்குநர் (காசநோய்) மரு.மு.சஙகரி, புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் மரு ராம்கணேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.