புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி நேற்றுஇரவு முழுவதும் பக்தர்கள் அலங்கார வண்டிகள் மலர்கள் எடுத்து வந்து முத்துமாரியம்மனுக்கு படைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் மலைபோல குவிந்தது. இந்த நிலையில் இன்று காலை கோவிலில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு சாற்றிய பூக்களை பக்தர்களுக்கு பிரித்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா இதில் கலந்துகொண்டு பூக்கள் பிரித்து கொடுக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்,
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .பா.ஐஸ்வர்யா.
உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) வே.சுரேஷ், செயல் அலுவலர் (திருக்கோயில்கள்) முத்துராமன் மற்றும் அரசு அலுவலர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.