புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர் சோமசுந்தரம்(60), இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில் சோமசுந்தரம், விஜயராகவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டாராம். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.