புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான ஆ.செந்தில் நேற்று காலை மாரடைப்பில் காலமானார். அவரது உடல் சாந்தநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு,,எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன், மற்றும் எம்.பிக்கள்
எம்.எம்.அப்துல்லா,துரைவைகோ,
திருச்சி மேயர் அன்பழகன், அ.திமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏக்கள் முத்துராஜா, சின்னத்துரை, திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம், புதுகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன்அரசு,கவிதைப்பித்தன்,ராமசுப்புராம், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வீரமணி, தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன், வழக்கறிஞர் கள்
எஸ்.திருஞானசம்பந்தம் ,வெங்கடேசன்,சிற்றரசு,ராமையா,செந்தில், அனைத்துக்கட்சியைச்சார்ந்த மு.கலியமூர்த்தி ,ம.திமுக,வி.முருகேசன் காங்கிரஸ், ராமச்சந்திரன் , அ.ரெத்தினம்,க.நைனாமுகம்மது,சுப.சரவணன்,எம்.எம்.பாலு,பெ.ராஜேஸ்வரி, இலுப்பூர் ஆர்.டி.ஓ.அக்பர்அலி,
புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன் , ஆர்.எம்.சத்தியா,
உள்ளிட்ட திமுகவினர் , அனைத்து கட்சியினர், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஆ.செந்தில் மறைவை யொட்டிபுதுக்கோட்டை நகரில் அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை 10 மணி அளவில் செந்தில் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழ ராஜவீதி, பிருந்தாவனம் வழியாக போஸ் நகரில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், துரை வைகோ எம்.பி. உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் நடந்தே வந்தனர். அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.