Skip to content
Home » போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று புதுகை நகரில் போதை பொருள் தடுப்பு வேட்டை நடத்தினர். அப்போது நகரின் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்றதாக 13 பேரை பிடித்து  வெள்ளனூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

நள்ளிரவில் போலீஸ் விசாரணையின்போது  ஒருவர் இறந்து விட்டார்.  அவரது பெயர் எஸ்.விவேக் என்ற விக்னேஸ்வரன். புதுக்கோட்டை டவுன் சாந்தநாதபுரம் 7ம்வீதியை சேர்ந்தவர்.  (இவரது தந்தை சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டார்)  தற்போது அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் தாக்கியதில் தான்  விவேக் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். உடல் நலக்குறைவு ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!