சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் ஏவிசிசி மழலையர் பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் நிறுவனரும்,ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான ஏவிசிசி.கணேசன் குத்துவிளக்கேற்றி யோகா தின விழாவை துவக்கி வைத்து யோகா பயிற்சியின் அவசியத்தை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் விளக்கி சிறப்புரையாற்றினார். அப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014ல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான்,கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதையும், அமெரிக்கா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐநா சபையில் யோகதினம் கொண்டாடுவதையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, மழலையர்கள் யோகாதின உறுதிமொழி எடுத்துக்கொண்டு,யோகா பயிற்சிகள் செய்தனர்.ஏவிசிசி பள்ளி நிர்வாகி மல்லிகா கணேசன் மற்றும் ஆசிரியைகள், பணியாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.