புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சப்.இன்ஸ்பெக்டர் சங்கீதாவை, ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், எஸ்.ஐ. சங்கீதா அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை வழக்கறிஞர் கலீலூர் ரகுமான் என்பவர் கொடுத்த புகார் தொடர்பாக எஸ்.ஐ. சங்கீதா கைது நடவடிக்கை எடுக்கவில்லை என புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சங்கீதா இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
