புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பள்ளத்துபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி விமலா. மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே இவருக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இன்று காலை விமலா திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் விமலா மீது மோதியது. இதில் விமலா அந்த இடத்திலேயே இறந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைககப்பட்டது. இது குறித்து மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்த கார் டிரைவர் லெனின்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.