புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியராக இரா.கவியரசு பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து இங்கு மாற்றலாகி வந்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்ற வட்டாட்சியர் இரா.கவியரசுவிற்கு பத்திரிக்கை நிருபர்கள், அலுவலக பணியாளர்கள்,வருவாய்
ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,உதவியாளர்கள் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த வட்டாட்சியர் இரா.கவியரசு,
தனது பணி சிறக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொண்டார்.