புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 1.50.லட்சம் மதிப்பிலான கழிப்பறையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
திறந்து வைத்தார். பின்னர் பள்ளிவளாகத்திலேயே தீயணைப்பு துறை மூலம் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பான முறையில் எவ்வாறு பட்டாசு வெடிப்பது, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ,மாவட்ட நூலகத்தில் 200மாணவர்களை சந்தாதாரர்களாக சேர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்து
உரையாற்றினார். இந்நிகழ்வில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது,
நகராட்சி தலைவர் திலகவதிசெந்தில்,துணைத்தலைவர்லியாகத்அலி,நகர தி.மு.க.செயலாளர்ஆ.செந்தில்,கழக மாநிலவிவசாய அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், மற்றும் எம்.எம்.பாலு, சுந்தரம்,ராஜமாணிக்கம், மற்றும்கவுன்சிலர்கள்,பள்ளிதலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் கள், தீயணைப்பு துறை யினர் பங்கேற்றனர்.