புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக்கோட்டையில், தொல்லியல் அகழாய்வுப் பணியினை, நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும்
காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் இன்று (20.05.2023) தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்கள், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.