புதுக்கோட்டை ஆக 30-ஆவணி அவிட்டத்தை யொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அக்ரஹாரம் பகுதியில் வழக்கம் போல் புதன்கிழமை ஆவணி அவிட்ட தினத்தில் வேதமந்திரங்களுடன் கூட்டாக பூணுல் அணியும் நிகழ்வு ஒரே இடத்தில் நடைபெற்றது. திருக்கோகர்ணம் பிராமணர் சங்க தலைவர் சீனிவாசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆவணி அவிட்டம் என்பது
ஆண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை யொட்டிவரும் அவிட்ட நட்சத்திர நாளில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். ரிக்,யஜூர் வேதங்களை படிக்கும் பிராமணர்களும் இந்த நாளில் பூணூலை மாற்றி கொண்டனர்.