புதுக்கோட்டையில் அ.திமுக வடக்கு , தெற்கு மாவட்ட தத்தின்சார்பில் திலகர் திடலில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள்
எம்.எல்.ஏக்கள் ராஜநாயகம், கார்த்திக் தொண்டைமான்,நெடுஞ்செழியன்,பொருளாளர் வி.சி.ராமையா,நகரச் செயலாளர்கள் பாஸ்கர்,எஸ்.ஏ.எஸ்.சேட்டு, வழக்கறிஞர் ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான அ.திமுகவினர்பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.