புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி.எஸ்.ஜோதிமணி , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.