புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மதர் தெரசா கல்லூரியில் 495 நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்தும், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் க.வைரம்மற்றும் ஆளினர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு,காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்துகாண்பிக்கப்பட்டது.
இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 6,7,8,10,12 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மற்றும் விராலிமலை பொதுமக்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், பாதுகாப்பு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் உதவி எண்கள் (1098, 181, 1930, 10581) குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போலீசாரின் இந்த விழிப்புணர்வு பணிக்கு மாணவிகள், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர். மாணவிகளுக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்ததாக ஆசிரியைகள் தெரிவித்தனர்.