புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிவட்டம் வாண்டாகோட்டை ஊராட்சி யில் எழுந்தருளியுள்ள திருவுடையார்பட்டி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.மூலகோபுரம், வினாயகர்,அம்பாள் சன்னதி கோபுரங்களிலும் முகப்பில் உள்ள கோபுரத்தில்உள்ள கலசங்களிலும் யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.இந்த ஆலயம் 200ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. காசிக்கு சென்று
புண்ணியம் கிடைப்பதை விட இந்த ஆலய முன்புறம் ஒடும் வெள்ளாற்றில் நீராடி இங்கு வழிபட்டால் காசிக்கு வீசம்
புண்ணியம்,பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.