செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவேந்தல் விழா புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் A.சுப்பையா தலைமையில்புதுக்கோட்டை மச்சுவடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத் தலைவர் M.லியாகத் அலி, சாலை பாதுகாப்பு விழிப்புணர் சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா, 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மை.பால்ராஜ்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிவாஜி சமூக நலப் பேரவை நகரத் தலைவரும், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவருமான B.அசோகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், பொருளாளர் R.சங்கர், சேது கார்த்திகேயன், புதுகை புதல்வன். பீர் முகமது ,KRG.ரவிமற்றும் சிவாஜி சமூகநல பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
