புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று
(25.09.2023) துவக்கி வைத்து, கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.