புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில்மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச
பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (30.11.2023) துவக்கி வைத்தார்.
பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் கையேட்டினை வழங்கினார். உடன் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர்
ரேவதி, காரைக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் திரு.எ.எழிலரசன், மாவட்ட முன்னோடி வங்கி
மேலாளர் ஆனந்த், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி, ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய
இயக்குநர் கலைச்செல்வி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.