தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு கிடங்கினை இன்று (08.09.2023) திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம்/வட்டம் திருவப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டகலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, பங்கேற்றார். உடன் மண்டல மேலாளர் (தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்) (திருச்சி) க.தமிழ்ச்செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், சேமிப்பு கிடங்கு மேலாளர் (புதுக்கோட்டை) .ம.பழனியப்பன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்
புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….
- by Authour
