புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா , மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத் அலி, புதுக்கோட்டை கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.