புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ,கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மருத்துவர்அணி அமைப்பாளர் மு.க.முத்துக்கருப்பன் ஏற்பாட்டில்
நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி உரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,அவைத்தலைவர் அரு.வீரமணி, கழகமாநில இலக்கிய அணி துணைத்தலைவர் கவிதைப்பித்தன், ஒன்றிய செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன், மற்றும் மணிமாறன், இதயம் அப்துல்லா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.