புதுக்கோட்டை ஆனந்தா பாக் (ஏ. எம். ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா” நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆனந்தா பாக் பொதுநலச்சங்கத்தின் தலைவர் சா.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இவ்விழாவை ஒட்டி நடைபெற்ற கோலப்போட்டி மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, புதுக்கோட்டை எம்எல்ஏ மருத்துவர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி 2 பேரும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில், நகர்மன்ற துணைத்தலைவர் எம்.லியாகத் அலி, நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி இருவரும் வாழ்த்துரை வழங்கினர். கோலப்போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு விநாயகா மெடிக்கல்ஸ் உரிமையாளர் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். மேலும் பொதுநலச்சங்கத்தின் கெளரவத் தலைவர்கள் பேரா.பொ.அண்ணாமலை, ஆசிரியர் சௌந்தரராஜன், துணைத்தலைவர்கள் ரெங்கசாமி, முகமது உசேன், துணைச்செயலர்கள் வேழவேந்தன் , சையத் இப்ராகிம் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பொதுநலச்சங்கத்தின் செயலாளர் சத்தியா வரவேற்று
பேசினார். நிறைவாக பொருளாளர் ரத்தினம் நன்றிகூறினார்.