புதுக்கோட்டைநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா,கழக இளைஞர்அணிசெயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் நகர திமுக செயலாளர் ஆ.செந்தில் வரவேற்று
பேசினார். இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக வழக்கறிஞர் சூர்யாவெற்றி கொண்டார். கழக மாநில நிர்வாகிகள் கவிதைப்பித்தன், த.சந்திரசேகரன், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரசு.வீரமணி,பொருளாளர் எம்.லியாகத்அலி, துணைச்செயலாளர்கள் பெ.ராஜேஸ்வரி, மதியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.